இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான எஸ்.எச். கபாடியா, பி. சுதர்சன் ரெட்டி, ஆர்.வி. ரவீந்திரன், பி. சதாசிவம் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வெள்ளிக்கிழமை அளித்துள்ள தீர்ப்பு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது.
இதன்படி, பொதுப் போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பிடிக்கும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு விருப்பம் தெரிவித்தால், ஏற்கெனவே இடஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் கிடைத்தவர்கள் வெளியேற்றப்படுவர்.
பொதுப் பிரிவில் காலியாகும் இடத்துக்கு, ஏற்கெனவே அந்தப் பிரிவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் பொதுப் பிரிவில் இடம் பிடித்து விடுவார்கள். அவ்வாறு இடம் பிடிப்பவர்கள், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ளவர்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பர்.
இதனால் இடஒதுக்கீடு வாய்ப்பு இல்லாதவர்கள் கூடுதல் இடங்களைப் பெறுவர். இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைத்த சிலருக்கு, வாய்ப்பு மறுக்கப்படும்.
எனவே, இதில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு, சட்ட ரீதியான பாதுகாப்பு நிலையை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று வீரமணி வலியுறுத்தியுள்ளார்
No comments:
Post a Comment